Sunday, March 05, 2006

Will India be a super power?

Well the caption was to get ur attention into this script...
I jus became a member of LOK PARITRAN ,the new political party formed by the educated youth of India..paying jus Rs.30 for a 3 year membership.

Anybody interested in changing the way politics happen in this country
can can go ahead and become a member ..They need Public support and mass reach
and nothing else..The intention and talent is already there..

vsit them at www.lokparitran.org
The chennai contact number is 93812 02545.

Arise guys and gals....After all,
A journey of thousand miles,begins with a step..

Thursday, March 02, 2006

Lymerick

சுமை

பதிமூணு பவுனு, பாதி லட்சம் ரொக்கம்
அத விடக் கணிசமா , பிரிஞ்சு போற துக்கம்
இவளுக்குப் பின்னால மூணு
அஞ்சு வயசுல ஒரு ஆணு
கரையேத்து முட்டும் கண்ணுக்கு மட்டும் தூக்கம்.!!

ஸ்ரீராம்
31.1.2006

Lymerick


மன்னிப்பு

தப்பு செய்யறது மனுச கொணம்
மனசில ஏன் இவ்வளவு ரணம்
தப்புன்னா கைய கட்டு
தேவயில்ல சப்ப கட்டு
திரும்பவும் செஞ்சாத்தான் நீ வெறும் பொணம்....

ஸ்ரீராம்
26.1.2006

Lymerick

அவசியம்

காதலிக்கத் தேவை தில்லு
எதையும் எதிர்த்து நில்லு
காதல் வெறும் இஷ்டம்
கல்யாணம் கொஞ்சம் கஷ்டம்
அதுக்காக விட்ரலாமா சொல்லு....

ஸ்ரீராம்
26.1.2006

விருந்தோம்பல்



ஸ்டேஷனுக்கு யாரு போறா
டாமிய நானே கட்டறேன்
காப்பித் தூள் புதுசு தானே
வேற புடவையே இல்லயா
வந்ததும் வணக்கம் சொல்லு
வரஞ்சதெல்லாம் வரிசயா காட்டு
வை இஸ் திஸ் ஹியர்
கண்ணாடிய கழட்டாதே
வாழையெல வேணுமா என்ன
இன்னிக்காவது இரும்பல நிறுத்தேன்
கொஞ்சம் மோட்டர் போட்ருங்க சார்
. . . . . . . . .. . . . . . .
போற வரைக்கும்
என்னத்தேன்னு பேசறது.....


ஸ்ரீராம்
13.2.2006

வருங்காலம்

குறி சொல்பவள் உதடு பிதுக்கியதும்
சுனாமி .....

ஸ்ரீராம்
18.2.2006

சுதந்திரம்

விடுதலையுணர்வில்லை..
புகைப்படத்தில் பிடிபடும் வரை....

ஸ்ரீராம்
21.1.2006

சினேஹம்


என்னுடனேயே பயணித்தவர்
சொல்லிக்கொண்டு இறங்கவில்லை !!!
பிளாட்பாரத்துச் சிறுவன்,
டாட்டா காட்டுகிறான் !!!!

ஸ்ரீராம்
23.1.2006

இராமாயணம்


மேடைக்குப் பின்னால்
அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா....

ஸ்ரீராம்
25.2.2006

ஒழுக்கம்


அணிலின் கூடலுக்காக
அடக்கப்பட்டது
தும்மல்....

ஸ்ரீராம்
21.1.2006

நிஜம்

பொதி சுமப்பவன் பாதங்கள்
மறைக்கின்றன,
மலை சுமக்கும் வண்ண அனுமனை !!

ஸ்ரீராம்
19.1.2006

மேன்மை


காரி உமிழ்ந்தாலும்
கனிவாகவே
தென்றல்.....

ஸ்ரீராம்
14.2.2006

கற்பு

உன்னையன்றி மற்றொன்றை
அனிச்சையாய் அளந்த பின்
சுதாரித்துத் திரும்புதல்
தன்னிறைவல்ல ..
கண்ணியத்தைச் சாருமோ ??

ஸ்ரீராம்
13.2.2006

அவலம்


மூன்று பேர்
மூச்சா போகும் சுவற்றில்
' நோட்டீஸ் ஒட்டாதீர் '.....

ஸ்ரீராம்
14.2.2006

கடமை

போக்குவரத்துப் புழுதி
விழ மறுக்கும் சிக்னல்
பார்க்கிங் திண்டாட்டம்
அடம் பிடிக்கும் கணிப்பொறி
அடுத்த மேசை தொலைப்பேசி
அவசியமில்லாத மீட்டிங்
அதிகாரியின் அந்தப் பார்வை
இவை அனைத்தினும்
மேலோங்கி நிற்கிறது,

நாளை ஞாயிற்றுக்கிழமை எனும்
பேருண்மை...

ஸ்ரீராம்
23.1.2006

அம்மா


எத்தனை வெதும்பல் எத்தனையோ சிலிர்ப்பு!!
எத்தனை புலம்பல் எத்தனையோ பூரிப்பு !!
எதையும் என் மனம் வரை அனுமதித்ததில்லை,
காரணம்
நீ என் அம்மா!!

நீ தவிர்த்திருக்கலாம்
அவளைப் பற்றிய அவ்விமர்சனத்தை,
காரணம்
நீ என் அம்மா!!

ஸ்ரீராம்
19/1/2006

ஆசை

இத்தனை இதமாய் இல்லை ,
அக்கறையாய் உடுத்திய அன்று...

ஸ்ரீராம்
22.1.2006